தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது: ராகுல் டிராவிட்

முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்ற அதிக அளவில் வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து 9 தொடர்களை கைப்பற்றியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளில் அசத்தி வருகிறது. குறிப்பாக புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். இந்தியாவின் […]