அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்ன் ! அஸ்வினின் பதிலடியால் வாயடைத்துப் போன ஆஸி. கேப்டன் பெய்ன் ! 1

அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்ன் ! அஸ்வினின் பதிலடியால் வாயடைத்துப் போன ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் !

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.

இன்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விகாரி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து விளையாடினர். தேநீர் இடைவேளைக்கு பிறகு வெற்றி பெற முடியாது என்பதால் இந்திய வீரர்கள் விகாரி மற்றும் அஸ்வின் போட்டியை ட்ரா செய்வதற்கு முயற்சி செய்து நிதானமாக விளையாடி வந்தனர். அப்போது விகாரிக்கு தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது.

அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்ன் ! அஸ்வினின் பதிலடியால் வாயடைத்துப் போன ஆஸி. கேப்டன் பெய்ன் ! 2

ஆனால் விகாரி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதற்குறிய முதலுதவி மட்டும் மேற்கொண்டு மீண்டும் களத்தில் விளையாடி வந்தார். இதன்பிறகு சிறப்பாக விளையாடி வந்த அஸ்வினுக்கும் பவுன்சர் பந்து ஒன்று வயிற்றுப்பகுதியில் தாக்கியது. ஆனால் அஸ்வினும் இந்த போட்டியை தொடர்ந்து விளையாடினார். இவர்கள் இருவரும் தனது அணிக்காக காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். இறுதியில் இவர்களது ஜோடி போட்டியை வெற்றிகரமாக ட்ரா செய்தது.

அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்ன் ! அஸ்வினின் பதிலடியால் வாயடைத்துப் போன ஆஸி. கேப்டன் பெய்ன் ! 3

இதில் விகாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார். இந்நிலையில் அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் தொடர்ச்சியாக ஸ்லெட்ஜிங் செய்து வந்தார். இதற்கு அஸ்வின் வெறித்தனமாக பதிலடி தொடுத்து டிம் பெய்ன்னை வாயடைக்க வைத்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் “நீங்கள் கபாவுக்கு வருவதற்கு என்னால் காத்திருக்க முடியாது” என்றார். ஏனென்றால் கபா மைதானத்தில் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டு அணிகள் வெற்றி பெறவில்லை. இதனால் கோபமடைந்த அஸ்வின் “நீங்கள் இந்தியா வருவதற்கு என்னால் காத்திருக்க முடியாது, அது உங்கள் கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி  கொடுத்துள்ளார். இவர்களது இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது.

அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்த டிம் பெய்ன் ! அஸ்வினின் பதிலடியால் வாயடைத்துப் போன ஆஸி. கேப்டன் பெய்ன் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *