பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் 1

கடந்த 6 சீசனில் முதன்முறையாக பிங்க் பால் டெஸ்ட் இல்லாமல் ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. #CricketAustralia

பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியை போல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் தேசிய அணியில் இடம்பெறுவார்கள்.பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் 2

இந்த வருடத்திற்கான தொடர் வரும் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. இது ஐந்து சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் புதிய முயற்சி செய்ய விரும்பினால், இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளும்.

பிங்க் பந்தில் நடத்தப்படும் பகல்-இரவு டெஸ்டிற்கு ஆஸ்திரேலியா அணி தயாராகும்போது இந்த தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றன. ஆனால் இந்தமுறை ஒரு போட்டி கூட பிங்க் பந்தில் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக முதல் பாதி சீசன் ரெட் பந்திலும், 2-வது பாதி சீசன் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் டியூக்ஸ் பந்தும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஜேஎல்டி ஒருநாள் கோப்பை தொடர் செப்டம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் 3

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இப்போதுள்ள சூழலில் புத்துயிர் அவசியம். பாரம்பரிய முறையில் விளையாடுவதைத் தவிர்த்து பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டிகளை விளையாடலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூருவில் பிசிசிஐ சார்பில் நேற்று எம்.ஏ.கே. பட்டோடியின் 6-ம் ஆண்டு நினைவு கிரிக்கெட் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் 4

இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகவில்லை. ஆனால், எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பிங்க் பந்தில், பகலிரவு போட்டிகளை நடத்துவதே சிறந்ததாக இருக்கும்.

பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் 5

 

இன்றைய சூழலில் கிரிக்கெட் என்பது முழுபொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்போட்டிகள் வந்ததில் இருந்து கிரிக்கெட்டின் மற்ற வகைகளான ஒருநாள் போட்டிக்கும், டெஸ்ட்

போட்டிக்கும் பெரும் அச்சுறுத்தல் விடுத்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நவீன முறையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் கொண்டு செல்வது இந்த நேரத்தில் அவசியமாகும்.

டி20, ஒருநாள் போட்டிகளுக்கு நாம் செய்யும் சந்தைப்படுத்தும் விஷயங்களை டெஸ்ட் போட்டிகளுக்கும் செய்ய வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நோக்கி வருவார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொழுதுபோக்கு சார்ந்ததாக மாற்றுவது அதனை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். டெஸ்ட் கிரக்கெட் போட்டிகளுக்கு என தனியாக ரசிகர்களை உருவாக்க வேண்டும், போட்டிகளை பார்க்க அவர்களைத் தூண்ட வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *