சூர்யகுமார் யாதவ் அளவிற்கு டிவில்லியர்ஸ், கெய்ல் வொர்த் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !!  1
சூர்யகுமார் யாதவ் அளவிற்கு டிவில்லியர்ஸ், கெய்ல் வொர்த் கிடையாது… அதிரடியாக பேசிய முன்னாள் வீரர்

சூரியகுமார் யாதவிற்கு முன்பு ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் எல்லாம் ஒன்றும் கிடையாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ்னர் யார் தெரிவித்துள்ளார்.

2022 சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் டி20 தொடருக்கான நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற அதே பார்மை 2023 சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி, தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி தற்போதைய இந்திய அணியின் நட்சத்திரமாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ்., நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

 

நிதானமான பேட்டிங் என்பதற்கே அர்த்தம் தெரியாத சூரியகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி, மைதானத்தின் நாலு திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டு இந்திய அணியின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து 200 பிளஸ் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய சூரியகுமார் யாதவை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் அளவிற்கு டிவில்லியர்ஸ், கெய்ல் வொர்த் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !!  2

இலங்கை தொடருக்கு முன்பு வரை தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ்வுடன்(மிஸ்டர் 360) சூரியகுமார் யாதவை ஒப்பிட்டு வந்த பலரும் தற்பொழுது ஏபி டிவில்லியர்ஸை விட சூரியகுமார் யாதவ் சிறந்த பேட்டிங் டெக்னிக்கை வைத்துள்ளார் என்று வெகுவான பாராட்டை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்திய அணியில் நடைபெறும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து, அதற்கு ஏற்ற தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசிவரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா., ஏபிடி வில்லையர்ஸ் மற்றும் ககிரிஸ் கெயிலை விட சூரியகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர் என எல்லை மீறி புகழ்ந்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் அளவிற்கு டிவில்லியர்ஸ், கெய்ல் வொர்த் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !!  3

சூரியகுமார் யாதவ் குறித்து பேசிய டேனிஷ் கனரியா., தற்போதைய புதிய யூனிவர்ஸ் பாஸ் என்றால் அது சூரியகுமார் யாரோ என்கிற பீஸ்ட்தான், இதற்கு முன்பு நான் கூறியது போலவே சூரியகுமார் யாதவ் என்ற ஒரு வீரர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே தோன்றக்கூடியவராவார் அவரைப் பற்றி இதற்கு மேல் நான் என்ன கூற வேண்டும். 51 பந்துகளில் 112 ரன்கள் அடிப்பது என்பது யாராலும் மீண்டும் செய்து விட முடியாது, நீங்கள் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் குறித்து பேசிக்கொண்டுள்ளீர்கள். ஆனால் இந்த இரண்டு அதிரடி வீரர்களும் சூரியகுமார் யாதவின் அதிரடிக்கு முன்பு சற்று மங்களாவே தெரிகின்றனர். சூரியகுமார் யாதவ் இந்த இரண்டு அதிரடி வீரர்களையும் மறைத்து விட்டார். மேலும் டி20 கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். என்றும் டேனிஷ் கனரியா சூரியகுமார் யாதவை ஓவராக புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *