இந்தியா

“டெஸ்ட் மேட்ச் போல ஆடு புவி”

நேற்று நடந்த இந்திய இலங்கை இடையேயான இரண்டாவது போட்டியில் ஹீரோயிசம் செய்து இந்தியாவை அழகாக வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றவர் புவனேஷ்வர் குமார்.237 என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி மிக எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதற்க்குப் பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மூன்றே ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்த இந்திய அணி 131 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து மிகவும் தடுமாறியது.

பின்னர் ஒரு புறம் தோனி ஒற்றை இலக்க ரன்னில் இருக்க அவருடன் வந்து ஜோடி சேர்ந்தார் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இருவரும் மிக பொருமையாக ஆடி இந்திய அணியை 3 விக்கெட் வித்யாசத்தில் கரை சேர்த்தனர். இறுதியாக 80 பந்தில் 53 ரன் எடுத்தார் புவனேஷ்வ்ர குமார். தோனி 68 பந்துகளில் 45 ரன் அடித்தருந்தார். இதில் புவனேஷ்வர் குமாரின் ஸ்ட்ரைக் ரேட் 66.25 ஆகும்.

ஆட்ட முடிவிற்க்குப் பின் பரிசளிப்பு விழாவில் புவனேஷ்வர் குமார் தோனி தான் என்னுடைய இந்த மாதிரியான ஆட்டத்திற்க்கு வழிவகுத்தார் என அவரை புகழ்ந்தார்.

நான் ஆடுகளத்திற்க்குள் செல்லும் போது தோனி என்னிடம் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட அறிவுருத்தினார். மேலும், இதனை ஒரு டெஸ்ட் மேட்ச் போல் நினைத்து ஆட கூறினார். எவ்வித அழுத்தமும் இல்லாமல் மிக இயல்பாக ஆட எனக்கு அறிவுருத்தினார்.

9வது விக்கெட்டிற்க்கு ஆட வந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் அரை சதம் அடித்தார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் முதல் அரை சதம் ஆகும்.

"டெஸ்ட் மேட்ச் போல ஆடு புவி" : தோனி 1

நாங்கள் எதையும் புதிதாக முயற்சி செய்யவில்லை. சாதாரணமாக அடிப்படை விதிகளை  கடைபிடித்து சாட்டுகளை ஆடினோம். மேலும், ஓவருக்கு 6 அல்லது 7க்கு மேலும் ரன் சேர்க்கவேண்டிய நிலைமை வராமல் பார்த்துக்கொண்டோம் அவ்வளவு தான்.

தற்போத் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒபட்டியை டக் வெர்த் லூயிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்யாசத்தில் வென்றது.

எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது 47 ஓவர்களையும் ஆடினால் கண்டிப்பாக எங்களால் வெற்றி பெற முடியுமென. எங்கள் கையில் எதுவும் இல்லை இழப்பதற்க்கு. ஏற்க்கனவே 7 விக்கெட்டுகளை இழந்த்திருந்தோம்.

ஒரு புறம் இவர் அரை சதம் அடிக்க மற்றொரு புறம் தோனி அருமையாக பொருமையாக 68 பந்துகளில் 46 ரன் சேர்த்தார்.

எந்த அழத்தமும் இன்றி மைதானத்திற்க்குள் சென்றேன். அவருக்கு எவ்வளவு ஒத்துளைக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழத்து ஆடினேன். 109 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்த அணி திடீரென 22 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது மிக அதிற்ச்சியாக இருந்தது.

மேலும், இலங்கை கேப்டன் உபுல் தரங்காவிற்க்கு அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகள் ஆட தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை தாமதமாக ஓவர் வீச பணித்ததற்காக அவர் அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஸ் சண்டிமால் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் லகிரு திரிமான்னேவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.