நெ.10 ஜெர்சி

நெ.10 ஜெர்சி அணிய காரணம் என்ன? ஸ்ரடுல் தகூர் .

இந்தியா இலங்கை இடையேயான 4ஆவது போட்டியில் இந்திய ஒரு நாள் அணியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் வேக்ப்பந்து வீச்சாளர் ஸ்ரடுல் தகூர். நேற்று இவர் அணிந்திருந்த நெ.10 ஜெர்சி தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்த நெ.10 ஜெர்சி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணிந்த ஜெர்சியின் எண்ணாகும்.

இது பற்றி போட்டியின் முடிவில் ஸ்ரடுல் தகூர் விளக்கம் அளிட்த்தார்.

அவர் கூறியதாவது,

என்னுடைய பிறந்த நாளின் மொத்த கூடுதல் 10 ஆகும். ஆகேவே அந்த நெ.10 ஜெர்சியை அணிகிறேன். ஆம், 16 அக்டோபர் 1991 அன்று பிறந்தேன் நான். அதை கூட்டினால், (16+10+1991 = 10)

ஆச்சர்யமாக இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். மேலும், இவரது பெரிலும் சச்சின் பெயரைப் போலவே எஸ்.டி என்ற துவக்க எழுத்துக்கள் உள்ள.

நசுங்கியது இலங்கை, இந்தியா 4-0 !!

இந்தியா இலங்கை இடையேயான 4ஆவது ஒரு நாள் போட்டி நேற்று இலங்கையில் உள்ள கொலும்பு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி ஸ்ரடுல் தகூருக்கு ஒரு நாள் போட்டியில் அறிமுகம் கொடுத்தது.

நெ.10 ஜெர்சி

விராத் ருதர தாண்டவம்

இலங்கை என்றாலே படு ஜோராகி விடுகிறார் விராத் கோலி. தொடக்க முதலே அனாசயமாகவும் அதிரடியாகவும் ஆடினார் விராத் கோலி. அவரது சாட்டுகள் ஒவ்வொன்றும் அழகாகவும் பார்ப்பதற்க்கு அசட்டயாகவும் இருந்தது.

இலங்கை பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார் விராட். பின்னர் 131 ரன் அடித்திருந்த போது மலிங்கா பந்தில் முனவீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராத் கோலி.

இந்த ஆட்டத்தில், 17 போர்களும், 2 சிக்சர்களும் அடங்கும். இது அவரது 29ஆவது சதமாகும்.இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 375 ரன்கள் குவித்தது.

இலங்கை பரிதாபம்

இதனையடுத்து, 376 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, முனவீரா களம் இறங்கினர்.

கடினமான இலக்கு என்பதால் அடித்து விளையாட முற்பட்ட டிக்வில்லா 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெண்டீஸ் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

நெ.10 ஜெர்சி

முனவீரா(11), திரிமன்னே(18) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், மேத்யூஸ் மற்றும் சிரிவர்தனா இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேத்யூஸ் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்தார். இருவரும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. சிரிவர்தனா 39(43) ரன்கள் எடுத்திருந்த போது பாண்டியா பந்தில் கேட்சானார்.

பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அறிமுக வீரரான தாக்கூர் 7 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிதொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை அணி நசுங்கியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *