அஸ்வினால் மட்டுமே இந்த சாதனையை செய்ய முடியும்; முத்தையா முரளிதரன் உறுதி !!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வினால் தனது சாதனையை முறியடிக்க முடியும் என முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரான ரவிச்சந்திர அஸ்வின், தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தனக்கான இடத்தை விரைவாக பிடித்தவர். கடந்த சில வருடங்களாக ரவிச்சந்திர அஸ்வின் டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரிலும் தனது வேலையை மிகச்சரியாக செய்து வரும் அஸ்வின், ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரர்களை தனது பந்துவீச்சின் மூலம் திணறடித்து வருகிறார்.

சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்து வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்று விவாதம் நடைபெறுவது போல், தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்து வரும் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயோன் ஆகியோரில் யார் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்ற விவாதமும் நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான ரவிச்சந்திர அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் ரவிச்சந்திர அஸ்வினால் மட்டுமே தனது சாதனையை முறியடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தையா முரளிதரன் பேசுகையில், “தான் எடுத்த 800 விக்கெட்டுகள் என்ற இலக்கை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லியோன் இருவரில் யார் தொடுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முத்தையா முரளிதரன் பதிலளித்துள்ளார். ”இப்போதிருக்கும் இளம் வீரர்களில் யாரும் 800 விக்கெட்டுகளை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என நினைக்கிறேன். எனினும் இந்திய வீரர் அஸ்வின் 800 விக்கெட்டுகளை முதலாவதாக எட்டுவார் என நம்புகிறேன். நாதன் லியோனுக்கு அந்த வாய்ப்பு குறைவு. ஏனெனில் அவருக்கு 396 விக்கெட்டுக்களை எடுப்பதற்கு அதிகமான மேட்ச் தேவைப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.