138 ரன்களில் ஆல் அவுட்… 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; இந்திய அணியை ஈசியாக வீழ்த்தி 27 வருட கனவை கனவை நனவாக்கிய இலங்கை !!

138 ரன்களில் ஆல் அவுட்… 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; இந்திய அணியை ஈசியாக வீழ்த்தி 27 வருட கனவை கனவை நனவாக்கிய இலங்கை இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை இலகுவாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக ரோஹித் சர்மா […]

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், ஜுன் மாதம் துவங்கு இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடர் என அனைத்து முக்கிய செய்திகளையும் உங்களுக்காக SportzWiki-Tamil நேரடியாக களத்தில் இருந்து வழங்குகிறது.

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ரோஹித் சர்மா..? மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் படுதோல்விகளை தொடர்ந்து ரோஹித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களே ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே கிரிக்கெட்டின் தற்போதைய தலைப்பு செய்தியாகவும் இருக்கிறது.

வேகத்தில் மட்டும் இல்லாமல் விவேகமான பந்துவீச்சாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள மாயன்க் யாதவ் தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக். பெங்களூர், பஞ்சாப் ஆகிய அணிகளை தனது துல்லியமான பந்துவீச்சால் சிதறடித்த மாயன்க் யாதவே கிரிக்கெட்டின் தற்போதைய தலைப்பு செய்தியாகவும் வலம் வருகிறார். லக்னோ அணியின் பந்துவீச்சிற்கு அசுரபலம் சேர்த்து வரும் மாயன்க் யாதவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகிறது.

மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடர். கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு நடத்தப்படாத சாம்பியன்ஸ் லீக் தொடரை மீண்டும் நடத்துவதில் இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. சாம்பியன்ஸ் டி.20 லீக் தொடர் குறித்தான ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. சுப்மன் கில்லின் கேப்டன்சியில் மிக சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சொந்த ஆடுகளமான அஹமதாபாத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளதே கிரிக்கெட்டின் இன்றைய முக்கிய செய்தியாகும்.

ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிட்னெஸ் காரணமாக பென் ஸ்டோக்ஸ் டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து அணிக்காக நீண்டகாலம் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ வேண்டும் என்பதற்காக பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் உள்ளிட்ட பெரிய தொடர்களில் இருந்து விலகி வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

கிரிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள SportzWiki-Tamil உடன் இணைந்திருங்கள்.

கிரிக்கெட் FAQs:

நடப்பு ஐபிஎல் தொடரின் தற்போதைய முக்கிய செய்தி என்ன..?

ஹர்திக் பாண்டியா தலைமையிலான தற்போதய மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மாவையே மீண்டும் கேப்டனாக்க திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலே கிரிக்கெட் உலகின் தற்போதய முக்கிய செய்தியாக உள்ளது

இன்றைய போட்டி குறித்தான கிரிக்கெட் செய்தி என்ன ?

பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவான அணியாக இருந்தாலும், சரியான கேப்டன்சி அமையததால் நடப்பு தொடரிலும் சொதப்பி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எப்படி செயல்பட போகிறது என்பதே கிரிக்கெட் உலகின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய முக்கிய செய்தி என்ன ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவலே இங்கிலாந்து கிரிக்கெட்டின் தற்போதை ஹாட் டாப்பிக்.

கிரிக்கெட்டின் இன்றைய தலைப்பு செய்தி என்ன ?

கோடி கோடிகளாய் கொட்டி எடுக்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பி வரும் நிலையில், பந்துவீச்சாளரான சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக நம்ப முடியாத வகையிலான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதே இன்றைய தலைப்பு செய்தியாக உள்ளது.

கொல்கத்தா - டெல்லி போட்டிக்கு பிறகான முக்கியமான கிரிக்கெட் செய்தி என்ன..?

சென்னை அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணியை அசால்டாக 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி குறித்தே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். அனைத்து வகையிலும் அசுர பலம் கொண்ட அணியாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கும் தகுதி பெற வாய்ப்புள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கருதுகின்றனர்