உமேஷ் யாதவுடன் களமிறங்கப் போகும் கொல்கத்தா

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபில்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். வலது இடுப்பு மற்றும் பின் முதுகு காயம் காரணமாக ஐபில்-10 இல் கொல்கத்தாவிற்காக முதல் இரண்டு போட்டிகள் ஆடவில்லை.

தன்னுடைய சொந்த ஊரில் இந்த ஐபில்-இல் முதல் போட்டி ஏப்ரல் 13 அன்று பஞ்சாபிடம் மோதுகிறது. 180 ரன் அடித்தும், பந்துவீச்சு சரியில்லாத காரணத்தால், மும்பையிடம் கடைசி நேரத்தில் தோற்றது. உமேஷ் யாதவ் ஆடினால், கொல்கத்தாவின் பந்துவீச்சு வலுவடையும் என எதிர்பார்க்க படுகிறது.

பார்மில் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் அன்கிட் ராஜ்பூட்டை தூக்கிவிட்டு, உமேஷ் யாதவை அணியில் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

“முதல் போட்டிக்காக உமேஷ் யாதவ் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்” என ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவிட்டு இருந்தது. “என்னுடைய அணியுடன் முதல் நாள் பயிற்சியில் ஈடுபட்டேன்” என உமேஷ் யாதவும் பதிவிட்டிருந்தார்.

சுழற்பந்து பிட்ச்களிலும் வேகப்பந்து வீசி விக்கெட் எடுக்க கூடிய திறமை கொண்டவர் உமேஷ் யாதவ். இந்த சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் உமேஷ் யாதவ்.

கிறிஸ் லின் காயம் காரணமாக கிங்ஸ் XI பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் களமிறங்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு சரியில்லாத காரணத்தினால் மும்பை இந்தியன்ஸிடம் கடைசி நேரத்தில் போட்டியில் கோட்டை விட்டது. உமேஷ் யாதவ் ஆடினால் கொல்கத்தாவின் பந்துவீச்சு வலுவடையும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த ஐபில்-இல் தன்னுடைய போட்டியை ஏப்ரல் 13 அன்று களமிறங்குவார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.