ஐபிஎல் தொடரில் கிறிஸ் லின் விளையாடுவது சந்தேகம்!

ஐபில்-2017 இல் ஆரஞ்சு நிற தொப்பியை வைத்திருப்பவர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்சின் நட்சத்திர தொடக்க வீரர் கிறிஸ் லின் மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் பந்து பிடிக்கும் போதும் அவரது தோள்பட்டையில் அடி பட்டது. அதன் காரணமாக, கிறிஸ் லின் இந்த ஐபில்-இல் இனி விளையாடமாட்டார் என தகவல் வந்துள்ளது.

கொல்கத்தாவின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் கிறிஸ் லின்னின் உடல்நலத்தை பற்றி கூறினார். “நாங்கள் கிறிஸ் லின்னின் தோள்பட்டை ஸ்கேன் ரிசல்டுக்காக தான் காத்திருக்கிறோம். தோள்பட்டை உடலில் படுபயங்கர கடினமான பகுதியில் உள்ளது. இது அவருக்கு பதட்டமான நேரம் ஆகும்.” என கூறினார்.

மேலும்,”அவர் ஓய்வு பெற கணிசமான காலம் வேண்டும், அதனால் அவர் மீதி இருக்கும் ஐபில் போட்டிகளை விளையாடாமலும் போகலாம். கிறிஸ் லின் இல்லாதது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை தரும்.” என கூறினார்.

மும்பைக்கு எதிரான போட்டியின் போது, ஜோஸ் பட்லர் பந்தை வாரி விட்டார். மிட்-ஆப்பிள் நின்று கொண்டிருந்த கிறிஸ் லின் அந்த பந்தை பிடிக்க முயற்சித்த போது, அவருக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டில் அவரும் மூன்றாவது முறையாக அதே தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்குறது.

முதல் இரண்டு போட்டியில் கொல்கத்தவிற்காக கலக்கி வருகிறார் கிறிஸ் லின். முதல் இரண்டு போட்டிகளில் 125 ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.