இந்தியாவின் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பிர், ஐபில்-இல் ஒரு முக்கிய புள்ளியாய் இருக்கிறார்.இந்த பத்து வருட ஐபில்-இல், சிறந்த கேப்டனாக இருப்பவரின் பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கிறது.
ஐபில் முதல் சீசனுக்கான ஏலத்தில் கவுதம் கம்பிரை $725,000 க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியது. அந்த சீசனின் முடிவில் 14 போட்டிகளில் 534 ரன் எடுத்து இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார்.2010-இல் அவருக்கு கேப்டன் பதவியில் உட்கார வைத்தது டெல்லி அணி. அந்த சீசனின் முடிவில், டெல்லிக்காக 1000 ரன் அடித்த முதல் வீரர் ஆவார்.
2011-இல் நடந்த ஏலத்தில் கம்பிரை &2.8 மில்லியனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அப்பொழுது, அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை கவுதம் கம்பிர் தட்டி சென்றார். 2011 ஐபில்-இல் கொல்கத்தாவின் கேப்டனாக பதவியேற்றார்.
அதன் பிறகு கொல்கத்தாவின் நிலமையையே மாற்றினார். 2012 மற்றும் 2014 ஐபில் சீசனினில் கோப்பையை வென்று சிறந்த அணியாக கொண்டுவந்தார். முதன் முறையாக கொல்கத்தா அணியை சாம்பியன்ஸ் லீகுக்கு கூட்டிச்சென்றார்.
கொல்கத்தாவிற்கு அதிக ரன் அடித்தவர் கம்பிர் தான். ஆனால் இப்பொழுது டெல்லி டேர்டெவில்ஸுக்கு ஆட ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். டெல்லிக்காக மீண்டும் விளையாடி ஐபில்-இல் தன்னுடைய ஓய்வை அறிவிப்பேன் என்றார்.
“என் மனது இன்னும் டெல்லியிடம் தான் இருக்கிறது. டெல்லிக்காக 3 வருடம் ஆடினேன். என்னுடைய ஐபில் பயணத்தை டெல்லியிடம் முடித்து கொள்ள ஆசை படுகிறது. நான் கொல்கத்தாவிற்கு கேப்டனாக இருந்தாலும், நான் டெல்லிக்காரன், டெல்லி அணியும் நன்றாக விளையாடவேண்டும்.” என கூறினார்.
2018 ஐபில் ஏலத்தில் பல நட்சத்திர வீரர்கள் பெயர்கள் இருக்கும். அதனால், கம்பிர் மீண்டும் டெல்லி அணிக்கேப் போக வாய்ப்புண்டு.