குஜராத் லயன்ஸ்க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் பட்டையை கிளப்பினார். குஜராத்தின் நடுவரிசை பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் ரஷீத். மெக்கல்லம், பின்ச் மற்றும் ரெய்னா ஆகியோர் ரஷீதின் சூழலுக்கு கட்டுப்பட்டனர். மூவரும் LBW முறையில் வெளியேறினர். இதனால் ரஷீதின் பந்தை கணிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
குஜராத் லயன்ஸ் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தனர். முதலில் 42 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்தனர். பின் தினேஷ் கார்த்திக் மற்றும் வெய்ன் ஸ்மித் ஜோடி போராடி 14-வது ஓவரில் 100 ரன் கடந்தனர். குஜராத் தரப்பில் அதிகமாக வெய்ன் ஸ்மித் 37 ரன்னும், தினேஷ் கார்த்திக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஐதராபாத்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசி அசத்தினார். ஐதராபாத்தின் பந்து வீச்சால் ட்விட்டர் எப்படி இருக்கிறது என்பதை பாப்போம்.