கிங்ஸ் XI பஞ்சாப் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டும் என முனைப்பில் உள்ளது.முதல் இரண்டு வெற்றிகளுக்கு பிறகு, கொல்கத்தாவிடம் தோற்று போனது பஞ்சாப்.அந்த தோல்வியை மறைக்க டெல்லியிடம் வெற்றி பெறவேண்டும் உத்வேகத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் முதல் போட்டியில் தோற்று போனாலும் இரண்டாம் போட்டியில் புனேவிடம் வெற்றி பெற்றது. வெற்றி கணக்கை தொடர டெல்லியும், தோல்வியை மறைக்க பஞ்சாபும் பலப்பரீட்சையில் உள்ளார்கள்.
நேருக்கு நேர்:
இதுவரை கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நேருக்கு நேர் 18 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் 10 வெற்றியும், டெல்லி 8 வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி கணக்கை உயர்த்த பஞ்சாப் அணியும், தோல்வி கணக்கை குறைக்க டெல்லி அணியும் போராடும்.
இந்த ஐபில்-இல்:
கிங்ஸ் XI பஞ்சாப் – வெற்றி, வெற்றி, தோல்வி.
எதிர்பார்க்கும் கிங்ஸ் XI பஞ்சாப் அணி:
ஹசிம் ஆம்லா, மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டானிஸ், க்ளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், வ்ரிதிமான் சஹா, அக்சர் பட்டேல், மோகித் சர்மா, வருண் ஆரோன்/ டி நடராஜன், சந்தீப் சர்மா.