ஐபில்-10 தொடங்கி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் தன்னுடைய சொந்த ஊரில் விளையாடப்போகிறது டெல்லி டேர்டெவில்ஸ். தன்னுடைய சொந்த ஊரில் விளையாட போகும் முதல் போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாபை எதிர்கொள்கிறது டெல்லி அணி. டெல்லியில் இதுதான் முதல் போட்டி என்பதால் இன்று தொடக்க விழா நடைபெறும். இரண்டு அணியுமே சமநிலையில் உள்ளது.
முதல் போட்டியில் டெல்லி அணி தோற்று, இரண்டாம் ஆட்டத்தில் புனேவை நசுக்கியது. முதல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப், மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் சரணடைந்தது.
நேருக்கு நேர்:
இதுவரை கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நேருக்கு நேர் 18 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் 10 வெற்றியும், டெல்லி 8 வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி கணக்கை உயர்த்த பஞ்சாப் அணியும், தோல்வி கணக்கை குறைக்க டெல்லி அணியும் போராடும்.
இந்த ஐபில்-இல்:
டெல்லி டேர்டெவில்ஸ் – தோல்வி, வெற்றி
எதிர்பார்க்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி:
சாம் பில்லிங்ஸ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கருண் நாயர், கோரே ஆண்டர்சன், கிறிஸ் மோரிஸ், ஜெயண்ட் யாதவ், பேட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா,ஜாஹீர் கான்,ஷபாஸ் நதீம்.