குஜராத்துக்கு எதிரான போட்டியில் டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. உடம்பு சரியில்லாத காரணத்தினால் கடந்த போட்டியில் விளையாடாத லசித் மலிங்கா, இன்று நடக்கும் போட்டியில் களமிறங்குகிறார்.
தன்னுடைய விளையாட்டு பொருட்கள் தொலைந்துவிட்ட காரணத்தினால் ஆரோன் பின்ச் இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஜேசன் ராய் விளையாடவுள்ளார். ஷடப்
ஜகதி வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் களமிறங்கவுள்ளார்.
இரண்டு அணியும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டியிலும் வெற்றியை தொடர நினைப்பார்கள்.
அணிகள் விவரம்:
மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா, பார்திவ் படேல், நிதிஷ் ராணா, ஜோஸ் பட்லர், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கிரண் பொல்லார்ட், ஹர்பஜன் சிங்க், மிட்சல் மெக்லனகன், லசித் மலிங்க, ஜேஸ்ப்ரிட் பும்ரா.
குஜராத் லயன்ஸ் – பிரண்டன் மெக்கல்லம், வெய்ன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஆண்ட்ரே டை, பிரவீன் குமார், பசில் தம்பி, முனாப் பட்டேல்.