ஐபில் 10: போட்டி 9: புனே vs டெல்லி: அணிகள், ஸ்கார்ஸ்

ஐபில் 10: போட்டி 9 – ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ்: புனேவில் நடக்கும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிராக டாசை வென்று பந்துவீச முடிவு செய்தது ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் .

வயிற்று வலி காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ஆடாததால், கேப்டன் பொறுப்பை அஜிங்க்யா ரஹானே எடுத்து கொண்டார். தனது தந்தை இறந்து விட்டதால் வீடு திரும்பினார் புனே வீரர் மனோஜ் திவாரி. ஆகமொத்தம், புனே நாலு மாற்றங்களை செய்தது. ஸ்டீவ் ஸ்மித், டேன் கிறிஸ்டின், மனோஜ் திவாரி மற்றும் ராகுல் சஹாருக்கு பதிலாக பேப் டு பிளெஸ்ஸிஸ், ஆடம் சம்பா, ராகுல் த்ரிபதி மற்றும் தீபக் சஹாரை மாற்றினர்.

டெல்லியில் கார்லோஸ் பிரேத்வெய்டுக்கு பதிலாக கொரே ஆண்டர்சனை சேர்த்துள்ளனர்.

இரண்டு அணியும் கடைசி போட்டியில் தோற்றுப்போனதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற முயற்சிப்பார்கள். புனே அணி கடைசி போட்டியில் பஞ்சாபிடம் தோற்று, இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பார்கள். முதல் போட்டியிலேயே பெங்களூருவிடம் தோற்று போன டெல்லி, வெற்றி கணக்கை தொடர முயற்சிக்கும்.

ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் XI:

அஜிங்க்யா ரஹானே (C), பேப் டு பிளெஸ்ஸிஸ், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிபதி, பென் ஸ்டோக்ஸ், மகேந்திர சிங்க் தோனி, ரஜத் பாட்டியா, தீபக் சஹார், ஆடம் சம்பா, அசோக் டிண்டா, இம்ரான் தாஹிர்.

டெல்லி டேர்டெவில்ஸ் XI:

சாம் பில்லிங்ஸ், ஆதித்யா தாரே, சஞ்சு சாம்சன், கருண் நாயர், ரிஷப் பண்ட், கொரே ஆண்டர்சன், கிறிஸ் மோரிஸ், பேட் கம்மின்ஸ், சபாஸ் நதீம், ஜாஹீர் கான்(C), அமித் மிஸ்ரா.

1வது இன்னிங்:

டெல்லி டேர்டெவில்ஸ் (பேட்டிங்)

ஆதித்யா தாரே (c தோனி b சஹார்) – 0(5)
சாம் பில்லிங்ஸ் (b தாஹிர்) – 24(17)
சஞ்சு சாம்சன் (b சம்பா) – 102(63)
ரிஷப் பண்ட் (ரன் அவுட் (அகர்வால்)) – 31(22)
கோரே ஆண்டர்சன்* – 2(4)
கிறிஸ் மோரிஸ் * – 38(9)
ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் (பந்துவீச்சு)

டிண்டா 3-0-36-0
சஹார் 3-0-35-1
ஸ்டோக்ஸ் 4-0-41-0
தாஹிர் 4-0-24-1
சம்பா 4-0-45-1
பாட்டியா 2-0-21-0

2வது இன்னிங்:

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் (பேட்டிங்)

ரஹானே (c சாம்சன் b கான்) – 10(9)
அகர்வால் (c மோரிஸ் b கான்) – 20(18)
பிளெஸ்ஸிஸ் (c பண்ட் b நதீம்) – 8(7)
த்ரிபதி (c நதீம் b மோரிஸ்) – 10(5)
ஸ்டோக்ஸ் (c பண்ட் b கம்மின்ஸ்) – 2(5)
தோனி (c நாயர் b மிஸ்ரா) – 11(14)
பாட்டியா (c மோரிஸ் b மிஸ்ரா) – 16(17)
சஹார் (c பண்ட் b கான்) – 14(6)
சம்பா (c சாம்சன் b மிஸ்ரா) – 5(7)
டிண்டா (c மிஸ்ரா b கம்மின்ஸ்) – 7(7)
தாஹிர்* – 0(2)

டெல்லி டேர்டெவில்ஸ் (பந்துவீச்சு)

நதீம் 4-0-23-1
கம்மின்ஸ் 3.1-0-24-2
கான் 3-0-20-3
மோரிஸ் 2-0-19-1
ஆண்டர்சன் 1-0-10-0
மிஸ்ரா 3-0-11-3

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.