கங்குலியின் கனவு அணியில் தோனிக்கு இடம் இல்லையா ?

தற்போது இந்தியாவில் 10வது ஐ.பி.எல் மிகவும் சுவாரசியமாக நடந்து வருகிறது, இதில் கங்குலி கனவு அணியை வெளியிட்டார் இதில் ஆச்சிரியம் என்னவென்றால் இதில் நமது தோனிக்கு இடம் கொடுக்கவில்லை கங்குலி.

கங்குலி வெளியிட்டுள்ள கனவு அணியில் விராட் கோலி, கம்பிர்  ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், நிதிஷ் ராணா, மணிஸ் பாண்டே, ரிஷப் பந்த், சுனில் நரேன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் இதில் கங்குலி தோனிக்கு இடம் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.அதே சமயம் சில வாரங்களுக்கு முன்னர் தோனி மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் இல்லை என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை கங்குலி இதனால் தான் தோனிக்கு தனது கனவு அணியில் கங்குலி இடம் கொடுக்கவில்லையோ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதே போல் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்ன்னும் கனவு அணியை வெளியிட்டார் இதில் தோனி தான் அணியின் கேப்டன் என ஷேன் வார்ன் தெரிவித்து இருந்தார்

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.