தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 போட்டியில் பங்கேற்கும் அணியை நடிகை பிரீத்தி ஜிந்தா வாங்கியுள்ளார்.
தென்னாப்ரிக்காவில் நடைபெறவுள்ள குளோபல் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணி ஒன்றை, பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா வாங்கியுள்ளார்.
அவர் வாங்கியுள்ள ஸ்டெலன்போஸ்ச் அணியில் டூப்ளஸ்சி, மலிங்கா, அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கட் கூறியதாவது,
“பிரீத்தி ஜிந்தா பார்ல் பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்டெலன்போஷ் மொனார்க்ஸ் அணியை வாங்கியுள்ளார் என்ற தகவலை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் டி20 குளோபல் லீக் குடும்பத்துக்கு அவரை வரவேற்கிறேன்” என்று கூறினார்.
‘ஸ்டெலன்போஷ் மொனார்ச்ஸ்’ அணியில் தென் ஆப்பரிக்காவின் முன்னணி வீரராக டு பிளெசிஸ் உள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் குளோபல் லீக் தொடர் வரும் நவம்பர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது