2022 ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்தும் காண்போம்.
ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 2022 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
நான்கு முறையில் டைடல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,கொல்கத்தா,லக்னோ மற்றும் பஞ்சாப் அணி ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது,அதேபோன்று 5 முறை டைடல் பட்டத்தை வென்ற மும்பை அணி,டெல்லி, ராஜஸ்தான்,கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9இடத்தில் உள்ளது.
ஒரு காலத்தில் ராஜாவாக வளம் வந்த 2 அணிகளும் 2022 ஐபிஎல் தொடரில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த நிலைமையை மும்பை இந்தியன்ஸ் அணி, 2014 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எதிர்கொண்டுள்ளது இந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டியில் பரிதாபமாக தோல்வியைத் தழுவியிருந்தாலும், தன்னுடைய தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
இன்னும் 11 போட்டிகளில் மீதம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இதிலும் சென்னை அணிக்கு சில சிக்கல் இருப்பதாக தெரிய வருகிறது, ஏனென்றால் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிவிட்டதால், சென்னை அணியின் உறுதித்தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.