திரும்பி வரும் நாளை அறிவித்தார் விராட் கோலி

இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அந்த அணியின் ரசிகர்களுக்கு விருந்து எனவும் கூறலாம். பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி எப்பொழுது திரும்பி வருவார் என்ற நாளை தெரிவித்துள்ளார்.

தோள்பட்டை காயம் காரணமாக இதுவரை ஐபில் -10 இல் ஒரு போட்டி கூட ஆடவில்லை. இந்த ஐபில் -இல் விராட் கோலி இல்லாமல், பெங்களூரு ஒரு வெற்றியும் இரண்டு தோல்வியும் பெற்றிருக்கிறது. ஐபில்-இன் முதல் போட்டியில் ஐதராபாத்திடம் தோல்வியை கண்டாலும் ,டெல்லிக்கு எதிரான போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே தெம்பில் பஞ்சாபிடம் மோதிய பெங்களூரு தோல்வியையே கண்டது.

நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாமல் பெங்களூரு அணி திண்டாடுகிறது சொல்லலாம். விராட் கோலி இல்லாததால் அவருடைய பொறுப்பை ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கவனித்து கொண்டிருக்கிறார்.

பெங்களூருவின் அடுத்த போட்டி தன்னுடைய சொந்த ஊரிலே நடக்கிறது. விராட் கோலியும் கிட்டத்தட்ட குணமாகிவிட்டார் என கூறுகிறார். தன்னுடைய அடுத்த போட்டியில் மும்பையுடன் மோத போகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 11, மதியம் கோலி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய காயம் பற்றி கூறியிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். அத்துடன் “கிட்டத்தட்ட நான் தேறிட்டேன்” என்றும் கூறி இருந்தார். அந்த விடீயோவை 2 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்திருக்கின்றனர்.

“என்னால காத்திருக்கமுடியால, கிட்டத்தட்ட நான் முன்னேறிடேன் , ????✌️???? ஏப்ரல் 14” என பதிவிட்டிருந்தார்.

பெங்களூரு அடுத்த போட்டியில் தன்னுடைய சொந்த மண்ணில் மும்பை அணியை சந்திக்கிறது. விராட் கோலி அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.