தோனியை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி

முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் கொண்டிருப்பவர் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார் விராட் கோலி. 2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி உள்ளார்.

தற்போது ஐபில் சீசன் 10 நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். அவர்கள் போடும் போட்டோ மற்றும் விடீயோவிற்கு, லைக், கமெண்டுகள் செய்து செய்திகளை ரசிக்கின்றனர்.

இதனால், அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில உள்ளார். அவர் பதிவேற்றும் போட்டோ மற்றும் விடீயோக்களை, கோலியின் ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து ரசிக்கின்றனர்.

இந்த பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக முன்னாள் இந்தியாவின் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி உள்ளார். விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 12.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 34.5 மில்லியன் லைக்ஸ்கள் உள்ளன. தோனிக்கு இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 20.4 மில்லியன் லைக்ஸ் உள்ளன.

பேஸ்புக்கில் அதிக லைக் உள்ள டாப்-10 வீரர்கள் விவரம்

1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2. தோனி (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)
3. யுவராஜ் சிங் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
4. ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
5. சாஹிப் அல் ஹசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
6. கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
7. தவான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
8. காம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
9. மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

இன்ஸ்டாகிராமில் அதிக வாசகர்களை கொண்ட டாப்-10 வீரர்கள்

1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2. தோனி (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)
3. ஏபி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
4. யுவராஜ் சிங் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
5. ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
6. சுரேஷ் ரெய்னா (குஜராத் லயன்ஸ்)
7. கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
8. ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ்)
9. ஜடேஜா (குஜராத் லயன்ஸ்)
10. ரஹானே (ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்)

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.