சன் ரைசர் ஐதராபாத்தின் வேக பந்து வீச்சாளர் முஷ்டபிசுர் ரஹ்மான், ஏப்ரல் 12 அன்று மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என்று ஐதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
ஐபில் தொடங்குவதற்கு முன்னதாக ரஹ்மான் ஐபில்-இல் பங்கேற்க இன்னும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வந்தது. ஐபிலை தவிர்த்தால் இன்னும் தெம்பாக இருக்கலாம் என்று ஆலோசனை கூறினார் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டாசா.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேர்த்ததால் ஐதராபாத்துக்கான முதல் 2 ஆட்டங்களில் விளையாடவில்லை.
மும்பையில் ஐதராபாத் அணியுடன் ரஹ்மான் இணைவார் என்று பயிற்சியாளர் டாம் மூட் தெரிவித்தார்.
ஐபில் 9-இல் ஐதராபாத் வெற்றி பெற காரணமாக இருந்த ரஹ்மான் இல்லாமல், 2017 சீசனில் ரஹ்மான் இல்லாம இரண்டு போட்டிகள் ஆடி விட்டனர்.
இவர் 16 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் கைபற்றிவர்கள் பட்டியலில் 5வதாக இருந்தார். இவருடைய முதல் சீசனில் அற்புதமாக பந்துவீசி ஐதராபாத் கோப்பையை தட்டிச் செல்ல முக்கிய காரணமாய் இருந்தார்.
இருப்பினும் அவர் ஐதராபாத்துக்கான அணைத்து போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார். வங்கதேசம், அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் மே 12 அன்று தொடங்குகிறது. வங்கதேசத்திற்காக விளையாட இவர் சில நாட்களில் சென்று விடுவார். அதனால், ரஹ்மான் ஐதராபாத்துக்காக 7-10 போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என்று குறிப்பிடத்தக்கது.