டெல்லி டேர்டெவில்ஸ் விக்கெட்-கீப்பர் ரிஷப் பண்ட் இந்த ஐபில்-இல் கலக்கி கொண்டு வருகிறார். ஏப்ரல் 17 அன்று நடந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணி மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி முதலில் அடித்து ஆடினாலும் விக்கெட்டுக்களை பறிகொடுத்து கொண்டிருந்தது. ஆனால், ஒரு முனையில் ரிஷப் பண்ட் எதிரணி வீரர்களை பதம்பார்த்து கொண்டிருந்தார்.
முதல் இன்னிங்சின் 17வது ஓவரை வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். அவரை எதிர்கொண்ட பண்ட் முதல் பந்தில் ரன் ஏதும் அடிக்கவில்லை. அடுத்த ஐந்து பந்துகளை பிரித்து மேய்ந்துவிட்டார். அடுத்த ஐந்து பந்தில் மூன்று சிக்சர் மற்றும் இரண்டு நான்குகளை விளாசினார். இதன் மூலம் அவர் ஓவரில் 26 ரன்களை அடித்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 168 ரன் அடித்தது. உமேஷ் யாதவ் ஓவரில் பண்ட் 26 ரன்கள் அடித்த வீடியோவை இங்கே பாருங்கள்: