ஐபில் 10: போட்டி 12: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் – முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 143 ரன்களை மும்பைக்கு இலக்காக கொடுத்தது. இது பேட்டிங் பிட்ச் என்பதால் மும்பை அணி எளிதில் வெற்றி பெரும் என அனைவரும் எண்ணினர். ஆனால் மேற்கிந்திய பந்துவீச்சாளர் சாமுவேல் பத்ரீ ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
இன்று தான் முதன்முறையாக பெங்களூருக்காக விளையாடுகிறார் பத்ரீ. அவர் முன்னதாக உலகில் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்தார். 143 என்னும் எளிய இலக்கை அடிக்க விடாமல் கட்டுப்படுத்த விராட் கோலிக்கு சீரான விக்கெட்டுகள் தேவை பட்டது. அதனால் 3-வது ஓவரில் பத்ரீ ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
முதல் விக்கெட் ஸ்டுவர்ட் பின்னி எடுக்க, அதன் பிறகு 3 விக்கெட்டுகளை பத்ரீ கைப்பற்றினார். பத்ரீயின் ஹாட்ரிக்கிள் முதல் விக்கெட் பார்திவ் பட்டேலும், அடுத்து மெக்லனகனும் மற்றும் மூன்றவது விக்கெட் பார்மில் இல்லாத ரோஹித் சர்மா போல்ட் ஆனார். சாமுவேல் பத்ரீ ஹாட்ரிக் எடுத்த வீடியோ இங்கே காணுங்கள்: