இந்தியாவின் விக்கெட்-விக்கெட்-கீப்பர் வ்ரிதிமான் சஹா மறுபடியும் சிறந்த விக்கெட்-கீப்பர் என நிரூபித்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியின்போது ஒரு கேட்சை பறந்து பிடித்தார் சஹா. கருண் நாயரின் கேட்சை பறந்து பிடிக்க, கருண் நாயர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
டெல்லி டேர்டெவில்ஸின் இன்னிங்சில் சாம் பில்லிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் முதல் விக்கெட்டிற்கு 53 ரன் சேர்த்தனர். 53 ரன்னில் சாம்சன் அவுட் ஆக, உள்ளே வந்தார் கருண் நாயர். வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார் கருண் நாயர்.
முதல் இரண்டு பந்தை சந்தித்த நாயர், தடுத்து ஆடினார். மூன்றாவது பந்தும் தடுத்து ஆட முயற்சித்தார், ஆனால் பந்து நாயரின் பேட்டில் பட்டு பின்னாடி சென்றது. அந்த பந்தை பறவை போல் பறந்து பிடித்து ஆச்சர்யப்படுத்தினார் வ்ரிதிமான் சஹா. அவர் பறந்து சென்று பிடித்த விடியோவை இங்கே காணுங்கள்: