வான்கடேவில் ஏப்ரல் 9 அன்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக சென்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 178 ரன் எடுத்தது. 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து திண்டாடியது. பிறகு வந்த நிதிஷ் ராணா மற்றும் ஹர்டிக் பாண்டியா எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர்.
முதல் இன்னிங்சில் கொல்கத்தா தொடக்க வீரர்கள் கம்பிர் மற்றும் லின் சில பந்துகளை வானில் பறக்க விட்டு, பெவிலினுக்கு திரும்பினார். 150 ரன் கூட கொல்கத்தா தொடமாட்டார்கள் என்ற நினைத்த போது, மனிஷ் பாண்டே சிக்சர்களாய் பறக்க விட்டார். மெக்லனகன் வீசிய கடைசீ ஓவரின் முதல் இரண்டு பந்திலேயே 18 ரன் வாரி கொடுத்தார். விடியோவை பாருங்கள்: