வீடியோ: முதியவரை தாக்கிய ராயுடு

வீடியோ : ரோட்டில் முதியவரை தாக்கிய அம்பட்டி ராயுடு

நடு ரோட்டில் முதியவர் ஒருவரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, பொதுமக்கள் வீடியோ முன்பு முதியவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராயுடு மீது ஹைதராபாத்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நன்றி : ஒன் இந்தியா தமிழ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு, நடு ரோட்டில் மூத்த குடிமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு தனது எஸ்.யூ.வி காரில் சென்ற அம்பத்தி ராயுடு, நடு ரோட்டில் முதியவர் ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும் அதைத்தொடர்ந்து அவரை தாக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன.
அம்பத்தி ராயுடு காரில் வேகமாக சென்றதாகவும், அதை முதியவர் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அம்பத்தி ராயுடுவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து ராயுடுவுக்கு எதிராக ஐதாராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

31 வயதான அம்பத்தி ராயுடு, ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு,‌ காரில் வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில், காரில் ஏன் அவசரமாகச் செல்கிறாய் என முதியவர் ஒருவர், ராயுடுவைப் பார்த்து கேட்டுள்ளார்.

 இதனால் கோபமடைந்து காரில் இருந்து கீழே இறங்கி வந்த அம்பத்தி ராயுடு, அந்த முதியவரை தாக்கியுள்ளார்.
இந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனியர் சிட்டிசனைத் தாக்கிய கிரிக்கெட் வீரர் ராயுடுவுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Editor:

This website uses cookies.