இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நிச்சயமாக சதம் அடிக்க வேண்டும் என்று தற்போது கூறியிருக்கிறார். ஆனால் இறுதிப் போட்டியில் சதம் அடிப்பது சற்று கடினமான காரியம் என்றும் கூறியிருக்கிறார்.
கோலி முன்புபோல சிறப்பாக ஆடி சதம் அடிக்க வேண்டும்
விராட் கோலி 2018 ஆம் ஆண்டு 11 சர்வதேச சதங்களையும் அதைப்போல 2019ஆம் ஆண்டு 7 சர்வதேச சதங்களையும் அடித்திருந்தார். ஆனால் 2020ம் ஆண்டு அவர் ஒரு முறை கூட சர்வதேச அளவில் சதம் அடிக்கவில்லை. கடந்த 12 வருடங்களாக அவரை சர்வதேச அளவில் ஒரு சதம் கூட அடிக்காத ஆண்டு கடந்த ஆண்டு மட்டுமே.
கடந்த ஆண்டு போட்டிகள் குறைவாக அவர் விளையாடி இருந்தாலும், அவர் சர்வதேச அளவில் சதமடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 134 ரன்கள் மட்டுமே அவர் குவித்து இருந்தார். அதன் பின்னர் மனதளவில் தன்னை தயார்படுத்தி மீண்டும் இங்கிலாந்து மைதானங்களில் எப்படி அதிரடியாக ஆடி சதங்களை குவித்து தள்ளினாரோ, அதேபோல இறுதிப்போட்டியில் நிச்சயமாக சதம் அடிக்க வேண்டும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் நிதானமாக விளையாட வேண்டும்
இறுதிப் போட்டியில் சதமடித்து அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதுவும் நியூசிலாந்து அணிக்கெதிராக அடிப்பது மிகவும் கடினமான விஷயம் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியிருக்கிறார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி பந்துவீசும் பவுலர்கள் கிடையாது.
அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றிக் கொண்டு வரக்கூடிய வல்லமை படைத்தவர்கள். எனவே அவர்களை சற்று நிதானமாக கையாண்டு முடிந்த வரை நீண்ட நேரம் மைதானத்தில் விளையாட வேண்டும் என்றும், விராட் கோலியை தன்னுடைய சிறந்த பங்களிப்பை இறுதிப்போட்டியில் வழங்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் வலியுறுத்தியுள்ளார்.
விராட் கோலி இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் சர்வதேச அளவில் அது அவருடைய 71வது சதமாக அமையும். அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக சதங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் ( 71 சதம் ) உடன் அவரும் இணைந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். 100 சதங்கள் குவித்து முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.