விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பக்தி உணர்வுகளும் பனிப்போர்களும் நிகழ்வது இயல்பான ஒன்று. அதை பலர் சமூக வலைதளங்கள் மற்றும் மைதானத்திற்கு வெளியே வெளிக்காட்டிக் கொண்டாலும் ஒரு சில ரசிகர்கள் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே பாதுகாப்பு வளையங்களை தாண்டி மைதானத்திற்குள் உள்ளே அத்துமீறி நுழைந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்படி சிலர் பக்தி உணர்வோடும் சிலர் ஆக்ரோஷ உணர்வோடும் குறிப்பாக கிரிக்கெட் உலகில் நடந்துகொண்ட 10 சுவாரசியமான சம்பவங்களை நாம் இந்தக் கட்டுரையில் காண இருக்கிறோம்.
#10 ஆஸ்திரேலியா vs இந்தியா, 2008ஆம் ஆண்டு பிரிஸ்பேன் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விறுவிறுப்பான போட்டி நடந்துகொண்டிருக்கையில், ஆஸ்திரேலிய அணி 259 ரன்களை இலக்காக எட்ட வேண்டியிருந்தது. அச்சமயம் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போதைய முன்னணி வீரர் ஆன்ட்ரூ சைமன்ஸ் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைந்து சைமன்சை நெருங்க முயற்சித்தார். இதனால் சைமன்ஸ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக உள்ளே வந்த காவல்துறையினர் ரசிகரை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்போது பரவலாக பேசப்பட்டது.