ஒரு சர்வதேச தரத்திலான விளையாட்டாய் விளையாடும் வீரர்கள் நல்ல உடல் தரத்துடன் மிக முக்கியனாகி உயரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என சிக தனித்தனியான திறமைகள் இருப்பதால், உயராமாவர்களும் அதே போல குட்டையாக இருப்பவர்களும் சாதிக்கலாம் என காலம் முழுக்க பல வீரர்கள் நமக்கு உணர்த்தி வருகின்றனர். ஜிம்பாப்வே அணியின் தைபு, இந்த்தியாவின் பர்த்திவ் படேல் ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
தற்போது அப்படி உயரம் குறைவாக இருந்தும் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சாதித்தவர்களை பார்போம்.
10.மோமினுல் ஹக் – 5 அடி 3 அங்குலம்
வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் இவர். உயரம் குறைவாக இருந்தாலும் அற்புதநாக பேட்டிங் செய்யக்கூடியவர்.தனது23 வயதிற்குள் வங்கதேச அணிக்காக 26 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டெஸ்ட் போட்டிகளில்ஆடிவிட்டார் மோமினுல் ஹக். தற்போதும் வங்கதேச அணியில் ஒரு தூணாக நிற்க முயற்சி செய்து வருகிறார். இவருடைய உயரம் வெறும் 158 சென்டி மீட்டர் தான்.