ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி பெவர் சிங் டி20 தொடரில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானில் திஷா கிரிக்கெட் அகாடமி அணிக்காக விளையாடும் ஆகாஷ் சௌத்ரி பியர்ல் அகாடமி அணிக்காக விளையாடிய போது பந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த டி20 தொடரின் ஒரு போட்டியில் திஷா கிரிக்கெட் அகாடமிக்கு எதிராக பியர்ல் கிரிக்கெட் அகாடமி விளையாடியது, இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆகாசின் திஷா கிரிக்கெட் அகாடமி20 ஓவர்களில் 156 ரன் அடித்தது. இன்னர் இந்த இலக்கை எதிர்கொண்டு விளையாடிய பியர்ல் கிரிக்கெ அகாடமி 36 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.
36 ரன்னில் தனது 10 விக்கெட்டுகளையும் பந்து வீச்சாளர் ஆகாஷிடம் இழந்தது. மேலும், ஆகாஷின் பந்துகளில் ஒரு ரன் கூட பியர்ல் கிரிக்கெட் அகாடமி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 4 ஒவர்கள் வீசிய ஆகாஷின் அனைத்து பந்துகளும் டாட் பந்துகள் ஆகும். இவரது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகலும் , இரண்டு மற்றும் மூன்றாவது ஓவரில் தலா இரண்டு விக்கெட்டுகளும் தனது கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இந்த 4 விக்கெட்டுகளில் ஒரு ஹாட்-ட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
2002ஆம் ஆண்டு பிறந்த ஆகாஷ் சௌத்ரி ராஜஸ்தான்-உத்திரபிரேதச எல்லையில் உள்ள பரத்பூர் மாவட்டதைச் சேர்ந்தவர். இந்த போட்டியில் அவரது 4-4-0-10 என சாதனை படைத்தார்.