கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடி வரும் கைல் அப்போட் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காக விளையாடி வந்தவர் வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட். அந்த அணிக்காக 2013 முதல் 2017 வரை 11 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடிய நிலையில் ‘கோல்பாக்’ ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் குடியேறி, கவுன்ட்டி அணியான ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் ஹம்ப்ஷைர் அணி சோமர்செட் அணியை எதிர்த்து விளையாடியது. கைல் அப்பார்ட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கடெ்டுக்கள் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 17 விக்கெட்டுக்கள் அள்ளினார். 1956-ல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகிறது. அதன்பின் முதல்-தர கிரிக்கெட்டில் தற்போதுதான் ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறந்த விக்கெட் புள்ளிவிவரங்கள்
17-48 – சி பிளைத், கென்ட் வி நார்தாம்ப்டன்ஷைர் 1907
17-56 – சி பார்க்கர், க்ளோசெஸ்டர்ஷைர் வி எசெக்ஸ் 1925
17-67 – ஒரு ஃப்ரீமேன், கென்ட் வி சசெக்ஸ் 1922
17-86 – கே அபோட், ஹாம்ப்ஷயர் வி சோமர்செட் 2019
17-89 – டபிள்யூ.ஜி கிரேஸ், க்ளோசெஸ்டர்ஷைர் வி நாட்டிங்ஹாம்ஷயர் 1877
17-89 – எஃப் மேத்யூஸ், நாட்டிங்ஹாம்ஷைர் வி நார்தாம்ப்டன்ஷைர் 1923 – ஆப்பிரிக்க செய்தி நிறுவனம் (ஏ.என்.ஏ)