இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியின் முதல் நாள் நேற்று நடைபெற்றது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது இது இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது
இந்தியா 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் கோலி களம் இறங்கினார். புஜாராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ரன்களை உயர்த்த முயற்சித்தார். அதன் பலனாக இருவரும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ரஹானேவுடன் கோலி 88 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்தார். இருப்பினும் 74 ரன்களுக்கு கோலி ரன் அவுட்டானது இந்தியாவுக்கு பாதகமானது. ரஹானேவும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஹனுமா விஹாரியும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அஜின்க்யா ரகானே செய்த தவறால் முதல் நாள் முடிவில் 180 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த இந்திய அணி 253 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களத்தில் இருந்தார்கள் ஆனால் இன்று வந்தவுடன் 23 நிமிடத்தில் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை இழந்து விட்டனர்.
இந்த நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது அதற்குமேல் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆல் தாக்குப் பிடிக்க முடியவில்லை குறைந்தது 300 ரன்களை ஆவது இந்திய அணி கடந்து இருக்கும் ஆனால் அஜின்கியா ரஹானே செய்த தவறு இந்திய அணியை குறைந்த ரன்களுக்கு சுருட்டி விட்டது