பெங்களூரு பல்கலை கழகத்தின் மகளிர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த பெருமையை பெற்றார் 19 வயது சிம்ரன் ஹென்றி.
தென் மண்டல பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக அணியுடன் விளையாடிய முன்-கால் இறுதி போட்டியில் 72 பந்துகளில் 194 ரன் அடித்தார் 19 வயது சிம்ரன் ஹென்றி. தனிப்பட்ட சாதனை மட்டும் இல்லாமல், ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றார். அந்த போட்டியில் மோனிஷா என்கிற வீராங்கனையுடன் 241 ரன் சேர்த்தார் சிம்ரன் ஹென்றி.
“நான் எப்பொழுதும் போட்டியை தொடங்குவது போல் தான் தொடங்கினேன். கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. அடிக்கவி நன்னயா பல்கலை கழகத்திடம் (ஆந்திரப்பிரதேசம்) 107 ரன் அடித்தேன் மற்றும் திருவள்ளுவர் பல்கலை கழகத்திடம் (வேலூர்) 88 ரன் அடித்தேன். செட்டில் ஆக சிறிது நேரம் எடுத்து கொள்வேன். அப்படி அது நடந்து விட்டால் ரன் வேட்டை தொடரும். இந்த போட்டியில் நான் 18 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்தேன். என்னுடைய ஜோடி மோனிஷா சிறப்பாக விளையாடினார்,” என என சிம்ரன் ஹென்றி தெரிவித்தார்.
சிம்ரன் ஹென்றி அவருடைய 9 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறார். அவரது மாநிலத்துக்காக U16, U19 மற்றும் U23 ஆகிய அணிகளிலும் அவர் விளையாடியுள்ளார். தற்போது, அவர் மாநிலத்தின் மகளிர் ரஞ்சி கோப்பை அணியில் விளையாடி வருகிறார். அவருடைய தந்தையும் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர். அவர் தற்போது பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
ரஞ்சி டிராபி போட்டிகளை பற்றி பேசும் போது, அந்த போட்டிகளில் ரன் அடிப்பது கஷ்டம் எனவும் ஒப்புக்கொண்டார்.
“பல்கலை கழக போட்டிகளில் விளையாடுவது அவ்வுளவு எளிது அல்ல. மாநில அளவிலான சில சிறந்த வீராங்கனைகள் பல்கலை கழக போட்டிகளில் விளையாடுகிறார்கள். ரஞ்சி குப்பையாக இருந்தாலும் சரி பல்கலை கழக கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் சரி பந்தின் தகுதியை பார்த்து தான் விளையாடுவேன்,” என அவர் மேலும் கூறினார்.
இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கு சென்று கோப்பையை கைவிட்டது இந்திய மகளிர் அணி. ஆண்கள் கிரிக்கெட்டும் மகளிர் கிரிக்கெட்டும் ஒன்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீட் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தான் அவருக்கு முன்மாதிரி எனவும் கூறினார். ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தென்னாபிரிக்காவின் அட்டகாசமான வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தான் அவருக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.