கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை அறிமுகமான வீரர்கள் பலரும் தான் அறிமுகமான போட்டியிலேயே மிகச்சிறப்பாக செயல்படுவதில்லை. ஏனென்றால் அந்தப் போட்டியில் பதற்றமும் அச்சமும் அறிமுகமான அந்த வீரருக்கு நிச்சயம் இருக்கும்.
குறிப்பாக அந்த வீரருக்கு அந்த சூழல் மிகவும் புதிதாக இருக்கும், குறிப்பாக ஒரு நாட்டுக்காக அறிமுகமாகி விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் ஒரு சில வீரர்கள் தான் அறிமுகமான போட்டியிலேயே அனுபவ வீரரை போன்று மிகவும் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். மேலும் அறிமுகமான போட்டியிலேயே அந்த தொடரை கைப்பற்ற உதவியதற்காக வழங்கப்படும் மேன் ஆப் தி சீரியஸ் பட்டமும் பெற்றுள்ளனர். அப்பேர்ப்பட்ட இரண்டு இளம் இந்திய வீரர்கள் பற்றி காண்போம்.
கே எல் ராகுல்
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின் பொழுது தனது சர்வதேச ஒருநாள் தொடரை துவங்கிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி அத்தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய வீரராக திகழ்ந்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 63 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.மேலும் அந்தத் தொடரின் அனைத்து போட்டியிலும் நிலையான ரன்களை எடுத்ததன் காரணத்தால் அவருக்கு அந்தத் தொடரில் மேன் ஆப் தி சீரியஸ் பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.