இந்தியாவின் புதிய நெ.4 வீரர்கள் இவர்கள்தான்! அந்த இடத்தை தக்கவைப்பார்களா?

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைவதற்கு 4-வது வரிசையில களம் இறங்கி பேட்டிங் செய்வதற்கு நிரந்தரமான வீரர் இல்லாததுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. ஆட்டத்திற்கு ஏற்ப நான்காவது வரிசையில் ஏதாவது ஒரு வீரரை பேட்டிங் செய்ய வைக்கிறார்கள்.

இதனால் 2023 உலகக்கோப்பையை மனதில் கொண்டு அந்த இடத்திற்கு சரியான வீரர்ரை தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், 29 வயதான மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதேபோல் மின்னல் வேகத்தில் பீல்டிங் செய்யும் திறமை படைத்தவர்கள். குறிப்பாக மணிஷ் பாண்டே அவுட் பீல்டிங் அசத்தக்கூடியவர்.

இருவரில் யாராவது ஓருவர் 4-வது இடத்திற்கு சரியான நபராக திகழ்வார்களா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

 

டி20 தொடருக்கான அணி:

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், குணால் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

 

ஒரு நாள் தொடருக்கான அணி: 

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி:

விராத் கோலி (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன் ட், விருத்திமன் சாஹா, ஆர்.அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

Sathish Kumar:

This website uses cookies.