2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் ! பல ஆண்டுகாலம் கழித்து ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து கொண்ட இர்பான் பதான் !

2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் ! பல ஆண்டுகாலம் கழித்து ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து கொண்ட இர்பான் பதான் !

இர்பான் பதான் இந்திய அணிக்காக 2003ஆம் ஆண்டு அறிமுகமானவர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. கடந்த வருடம் வரை 29 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். அதனைத் தவிர 103 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். இதில் மொத்தமாக சேர்த்து 4,000 ரன்களும் 380 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்ட இவருக்கு பெரிதாக வாய்ப்புகளை கொடுக்கப்படாமல் கடந்த வருடம் விரக்தியில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சர்ச்சைகளை கூறியவர் இவர். இந்நிலையில் வேறு வழியின்றி தற்போது இலங்கை பிரீமியர் லீக் தொடரில் கிண்டி அணிக்காக விளையாடி வருகிறார். ஜபான்னா அணிக்கு எதிராக சமீபத்தில் விளையாடிய இவர் 19 பந்துகளில் 25 ரன் அடித்தார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இணைந்தார். இந்தியாவைச் சேர்ந்த ஜடேஜா மட்டுமே தற்போது வரை டி20 போட்டிகளில் 2000 ரன்களும் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

ஜடேஜா இந்த சாதனையை 220 போட்டிகளில் எட்டிப் பிடித்தார். இர்பான் பதான் 180 போட்டிகளில் இந்த சாதனையை எட்டினார். கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார் தற்போது வரை இந்திய அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் ஜடேஜா அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.