இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 1983 ம் ஆனது கபில்தேவ் தலைமையிலான உலகக்கோப்பையை விட 2011ம் ஆண்டு டோனி பெற்று தந்த உலகக்கோப்பை தான் பெரிது மற்றும் சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள் என்றால் அதில் ஒன்று 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற உலகக்கோப்பையும், மற்றொன்று 2011ம் ஆனது தோனி தலைமையிலான அணி பெற்ற உலகக்கோப்பையும் தான்.
தோனி தலைமையிலான அணி உலகக்கோப்பையில் இப்போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது. அதில், தோனி சிக்ஸர் அடித்து முடிக்கையில், “Dhoni finishes off in style” என கமென்டரியில் ஒரு குரல் வரும் அது வேறு யாரும் இல்லை ரவி சாஸ்திரி குரலே.
மேலும், 1983ம் ஆண்டு வென்ற உலகக்கோப்பை அணியில் ரவி சாஸ்திரி யும் இடம்பெற்றிருந்தார். இது போன்ற ஒரு நிகழ்வு அனைவருக்கும் அமைந்திடாது. அப்படி ஒரு வாய்ப்பு தற்போதய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு அமைந்திருக்கிறது.
இதுகுறித்து தனியார் நிகழ்ச்சியை ஒன்றில் பேட்டியளித்த அவர். எனக்கு 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தான் 1983ம் ஆண்டு பெற்றதை விட பெரிதாக படுகிறது என தெரிவித்தார்.
1983ம் ஆண்டு மிகவும் பின் தங்கிய வீரர்கள்
56 வயதாகும் ரவி சாஸ்திரி கூறுகையில், நாங்கள் எப்படி விமர்சிக்க பட்டோம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான்கள் கிளைவ் லாயிட், மல்கம் மார்ஷல், ஜோயல் கார்னெர், மைக்கேல் ஹோல்ட்டிங்ஸ் மற்றும் ஆண்டி ராபர்ட்ஸ் ஆகியோர் முன்னிலையில் பின் தங்கிய கத்துக்குட்டி அணி எப்படி வென்றது என விமர்சிக்கப்பட்டோம்.
ஆனால், 2011ம் ஆண்டு நாங்கள் வெல்லும் அணியின் ஒருவராக கருத்தப்பட்டோம். மேலும், உலகக்கோப்பை போட்டியகளை நடத்திய நாடு இதுவரை வென்றது இதை இந்தியா தகர்த்தி முதலில் வென்று சாதனை படைத்தது. ஆதலால், 2011ம் ஆண்டு வெற்றியே எனக்கு மிகவும் பெரிதாக படுகிறது.
மீடியா உதவியும் 1983ம் ஆண்டை விட 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான அணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.