பத்திரிகையாளரை வாயை மூட வைத்த ஸ்மிரிதி மந்தனா

கதை என்ன?

தற்போது இங்கிலாந்தில் மகளிருக்கான உலகக்கோப்பை நடந்து வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக விளையாடி வருகிறார். பத்திரிகையாளர் ஒருவர் இவரிடம் இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெற்றி பெறுமா? என்று கேட்ட போது, “என்னது? உங்களுக்கு தெரியாதா?” என நம்பிக்கையுடன் இந்திய அணிதான் வெற்றி பெறும் என கூறினார்.

ஒருவேளை உங்களுக்கு தெரியாது என்றால்…

தற்போது இங்கிலாந்தில் மகளிருக்கான உலகக்கோப்பை நடந்து வருகின்றன. இந்த தொடரில் இந்தியா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால், உலகம் முழுவதும் இவரை பற்றி தான் பேசுகிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா 72-பந்துகளில் 90 ரன் அடித்தது நல்ல இன்னிங்ஸ் என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடித்த சதம் சிறப்பான இன்னிங்ஸ் ஆகும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மந்தனா 72 பந்துகளில் 90 ரன் அடித்து அசத்தினார்.

விவரங்கள்:

அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது இந்திய மகளிர் அணி. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன் மட்டுமே அடித்தது. 183 ரன் அடிப்பது ஒன்றும் கடினம் இல்லை, ஆனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.அந்த நேரத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மற்றும் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி சிறப்பாக விளையாடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 108 சேர்த்தார்கள்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 8வது அரைசதம் அடிக்க தவறி விட்டார் மித்தாலி ராஜ். அந்த போட்டியில் அரைசதம் அடிக்க 4 ரன் மட்டுமே தேவை பட்ட நிலையில், 46 ரன்னில் அவுட் ஆனால் மித்தாலி ராஜ். ஆனால், அதே நேரத்தில் சதம் விளாசினார் ஸ்மிரிதி மந்தனா. மந்தனா 106 ரன் அடிக்க, 7 ஓவர் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றியை ருசித்தது.

அடுத்தது என்ன?

மித்தாலி ராஜ், ஜூலான் கோஷ்வாமி, ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்மான்ப்ரீட் கவுர் என வீராங்கனைகள் இருக்கும் போது, இந்திய அணி பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகிறது. இந்த உலககோப்பையில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி செம்ம பலத்துடன் இருக்கிறது இந்திய அணி.

இருந்தாலும் பத்திரிகையாளர் ஒருவர் இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெற்றி பெறுமா என்ற கேட்ட போது, தெறி ரிப்ளை அளித்தார் ஸ்மிரிதி மந்தனா.

பத்திரிகையாளர் – இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றி பெறுமா?

ஸ்மிரிதி மந்தனா – என்னது? உங்களுக்கு தெரியாதா?

இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெல்லும் என்னும் நம்பிக்கையில் சிறப்பாக பதில் அளித்தார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.

“நான் 90 ரன் அடிப்பதற்கோ 100 ரன் அடிப்பதற்கோ கடந்த ஐந்து மாதங்களாக நான் பயிற்சி எடுக்கவில்லை. நான் சிறப்பாக விளையாடி, இந்த உலகோப்பையில் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி தரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். இதை தான் ஐந்து மாதமாக செய்து கொண்டிருக்கிறேன்,” என இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.