2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி
2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடருடன் தொடங்கியது. இந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. பின்னர் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இந்த ஆண்டு இந்திய அணிக்கு படுபிசியாகவே அமைந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய அனைத்து அணிகளின் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை இங்கு பார்ப்போம்.
ரோஹித் சர்மா;
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, 2018ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மட்டும் 1030 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 73.57 ஆகும்.
ஷிகர் தவான்;
இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவானையே இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான மற்றொரு துவக்க வீரராக தேர்வு செய்துள்ளோம். மொத்தம் 19 போட்டிகளில் 897 ரன்கள் குவித்துள்ள தவானின் சராசரி 49.83 ஆகும்.
விராட் கோஹ்லி (கேப்டன்);
கிரிக்கெட் உலகின் கிங்காக வலம் வரும் விராட் கோஹ்லி இந்த ஆண்டில் மட்டும் 1202 ரன்கள் குவித்துள்ளார், அதுவும் வெறும் 14 போட்டிகளில்.
ஜோ ரூட்;
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 946 ரன்கள் குவித்துள்ளார்.
ஜாஸ் பட்லர்;
இங்கிலாந்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரரும், அந்த அணியின் விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான ஜாஸ் பட்லர் கடந்த ஆண்டில் தான் விளையாடிய 23 போட்டிகளில் மொத்தம் 671 ரன்கள் குவித்துள்ளார்.
ஷாகிப் அல் ஹசன்;
வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் கடந்த ஆண்டில் 497 ரன்கள் குவித்ததோடு பந்துவீச்சில் 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
திஷாரா பெரேரா;
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான திஷாரா பெரேரா பேட்டிங்கில் 3.58 சராசரி வைத்திருப்பதோடும், பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரசீத் கான்;
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படும் ரசீத் கான் வெறும் 20 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
குல்தீப் யாதவ்;
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 19 போட்டிகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரபாடா;
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா 14 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜஸ்ப்ரிட் பும்ராஹ்;
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வரும் பும்ராஹ் 20 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.