2018ம் ஆண்டில் சிறந்த டி.20 அணி
2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டி.20 தொடருடன் தொடங்கியது. இந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. பின்னர் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இந்த ஆண்டு இந்திய அணிக்கு படுபிசியாகவே அமைந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய அனைத்து அணிகளின் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய 2018ம் ஆண்டின் சிறந்த டி.20 அணியை இங்கு பார்ப்போம்.
ஆரோன் பின்ச்;
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான ஆரோன் பின்ச், கடந்த ஆண்டில் 1300 ரன்கள் குவித்துள்ளார்.
ஷிகர் தவான்;
இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த ஆண்டில் 689 ரன்கள் குவித்து 40.53 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். இது தவிர ஐ.பி.எல் தொடரிலும் 497 ரன்கள் குவித்துள்ளார்.
காலின் முன்ரோ;
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கார்லின் முன்ரோ, கடந்த ஆண்டு நடைபெற்ற டி.20 போட்டிகளில் மொத்த 1500க்கும் அதிமான ரன்கள் குவித்துளார்.
ரிஷப் பண்ட்;
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் 1209 ரன்களுடன், 41.68 ரன்களை தனது சராசரியாக வைத்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 172.71 ஆகும்.
கிளன் மேக்ஸ்வெல்;
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல், 926 ரன்கள் குவித்துள்ளார்.
ஆண்ட்ரியூ ரசல்;
விண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், அந்த அணியின் ஆல் ரவுண்டருமான ஆண்ட்ரியூ ரசல் 600 ரன்கள் குவித்துள்ளது மட்டுமல்லாமல் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
டூவைன் பிராவோ;
விண்டீஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டூவைன் பிராவோ கடந்த ஆண்டில் 209 ரன்கள் குவித்துள்ளார்.
சுனில் நரைன்;
விண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் கடந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடினார்.
ரசீத் கான்;
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவரான ரசீத் கான் ஐ.பி.எல் தொடர் உள்பட அனைத்து தொடர்களில் மாஸ் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஃப்ரா ஆர்சர்;
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூலம் கிரிக்கெட் உலகின் வெளிச்சத்திற்கு வந்த ஜோஃப்ரா ஆர்சர் கடந்த ஆண்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லி ஸ்டான்லேக்;
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான பில்லி ஸ்டான்லேக் 25 விக்கெட்டுகள் வீழ்த்த் 18.4 சராசரி வைத்துள்ளார்.