ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ப்ளே சுற்றுகளின் நேரம் மாற்றம் !!

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ப்ளே சுற்றுகளின் நேரம் மாற்றம் !!

ரசிகர்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு ஐபிஎல் 2018 பிளே ஆப் சுற்றுகளின் நேரத்தை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது.

ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, கூறும்போது, பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் மாலை 7.00 மணிக்குத் தொடங்கும், 8 மணி போட்டிகள் முடிவடைய கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி வரை ஆவதால் தொலைக்காட்சி நேயர்கள், மைதானப் பார்வையாளர்கள் ஆகியோரின் மறுநாள் காலை பணிகளைக் கருத்தில் கொண்டு 7 மணிக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

7 மணிக்கு தொடங்குவதால் ஒரு மணி நேரம் முன்னதாக போட்டிகள் முடிவடையும் இது ரசிகர்களின் பல்வேறு கஷ்டங்களுக்கு தீர்வளிக்கும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா நியூஸ்18 சானலில் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் என்பது அதுவாக இருப்பதற்குக் காரணமே ரசிகர்கள்தான். மைதானத்திலும் வீட்டில் தொலைக்காட்சி முன்பும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஆகவே ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடியத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமல்ல, வீட்டில் தொலைக்காட்சியில் பார்க்கும் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் ஆகியோர் காலையில் எழுந்து பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆகவே போட்டிகள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது என்றார்.

முதலில் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் புனேயில் வைக்கப்பட்டிருந்தது, ஆனால் காவிரிப் பிரச்சினையால் ஐபிஎல் எதிர்ப்புகள் கிளம்ப சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

இதனையடுத்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி மே27ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

Mohamed:

This website uses cookies.