கோஹ்லிக்கு சவால் விட்டு, முதலிடம் பிடித்த துவக்க வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கோஹ்லிக்கு சவால் விட்டு, முதலிடம் பிடித்த துவக்க வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2019ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் துவக்க வீரர். இது ரசிகர்களைப் பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை மிக சிறப்பாக அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

SYDNEY, AUSTRALIA – JANUARY 07: Virat Kohli and The Indian Cricket Team celebrate winning the Border Gavaskar trophy during day five of the fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 07, 2019 in Sydney, Australia. (Photo by Mark Evans/Getty Images)

அதன்பின், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும்  வங்கதேசம் ஆகிய அணிகளுடன் ஆடிய அணைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 2019ஆம் ஆண்டு முடிவில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

சொல்லப்போனால், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணிக்கு பின்னடைவே இல்லை.

லிமிடெட் ஓவர்களில் துவக்க வீரராக அசத்தி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்குவதால், சரிவர செயல்படவில்லை. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முறையாக துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

Rohit Sharma of India celebrates his Hundred during day 1 of the first test match between India and South Africa held at the ACA-VDCA Stadium, Visakhapatnam, India on the 2nd October 2019
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI

முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம், 3வது போட்டியில் இரட்டை சதம் என அங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். அதேபோல, தவானுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட மயங்க அகர்வால் 2 இரட்டை சதங்களை இந்த ஆண்டு அடித்து  அசத்தினார்.

இதன் மூலம், 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

2019 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள்:

எண்    பெயர்  டெஸ்டுகள்  ரன்கள்  சதங்கள்   அரை   சதங்கள்  சராசரி 
 1.  மயங்க்   அகர்வால்  8  754  3  2  59.04
 2.  ரஹானே  8  642  2  5  49.96
 3.  விராட் கோலி  8  612  2  2  63.28
 4.  ரோஹித் சர்மா  5  556  3  0  75.95
 5.  புஜாரா  8  507  1  4  51.52

Prabhu Soundar:

This website uses cookies.