கொரோனாவின் கோரதாண்டவம் ; முக்கிய தொடரை ரத்து செய்யப்படுகிறது
இந்த வருடம் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கொரோனாவின் காரணமாக ரத்து செய்யப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டிருந்தது. ஆசிய கோப்பை தொடரில் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே கலந்துகொண்டு ஆடும்.
கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் வைத்து நடத்தப்பட்ட ஆசிய கோப்பையில் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
அடுத்த ஆசிய கோப்பையை இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடத்த ஐ.சி.சி., முன்னதாக திட்டமிட்டிருந்தாலும், கொரோனாவின் தாக்கத்தால் ஆசிய கோப்பை நடக்குமா இல்லை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.
ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை குறித்தான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐ.சி.சி., கவுன்சில் கூட்டத்திற்கு பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட உள்ளதை பி.சி.சி.ஐ., தலைவரான சவுரவ் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் ஆசிய கோப்பையை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.