அடுத்த ஐபிஎல் சீசனில் இது வேண்டவே வேண்டாம்? பிசிசிஐ-க்கு ஐபிஎல் அணிகளின் வேண்டுகோள்!

அடுத்த ஐபிஎல் சீசனில் இது வேண்டவே வேண்டாம்? பிசிசிஐ-க்கு ஐபிஎல் அணிகளின் வேண்டுகோள்!

2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை 2022க்கு தள்ளிவைக்குமாறு ஐபிஎல் அணிகள் பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மூன்று ஆண்டிருக்கும் மெகா ஏலமாக நடக்கும். இடைப்பட்ட ஆண்டுகளில் ஓய்வு பெற்ற மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை எடுப்பதற்கான சிறு ஏலம் நடைபெறும்.

கடந்த முறை 2018 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன் பின்னர் ஜனவரியில் இந்தியா திரும்பியவுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க இருக்கிறது. இவை இரண்டும் முடிந்தவுடன் உடனடியாக ஐபிஎல் தொடரும் துவங்க இருப்பதால் மிகக் குறைந்த நாட்களில் ஐபிஎல் ஏலத்தை வைத்து முடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தெரிகிறது.

அதனால் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலத்தை 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தள்ளிவைக்க  கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் உட்பட இன்னும் சில அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ இடம்  எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருக்கின்றன.

இதனை பரிசீலித்து விரைவில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடக்குமா? இல்லையா? அல்லது 2022ஆம் ஆண்டிற்க்கு தள்ளி வைக்கப்படுமா? என்கிற விவரங்கள் விரைவில் பிசிசிஐ வெளியிடும் என தெரிகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெறவில்லை என்றால் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் ஏலத்தை குறிவைத்து தங்களது செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றிற்கும் பலனளில்லாமல் போகலாம்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பிசிசிஐ தரப்பு இறுதி முடிவை வெளியிடும் என யூகிக்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.