‘இரண்டு பேரில் இவரை கட்டாயம் எடுத்துருங்க’ தென்னாபிரிக்காவை துவம்சம் பண்ணுவாரு; இளம் வீரரை புகழ்ந்த ஜாம்பவான்!!

தென்னாப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 26-ஆம் தேதி துவங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க மைதானங்களில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை.

ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்க சென்றுள்ள இந்திய அணி பலம் மிக்கதாக காணப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பிறகு, தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருக்கிறது. முன்பு இருந்ததைவிட தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் உச்சத்தை பெற்றிருக்கிறது.

முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். தென்னாப்பிரிக்க மைதானங்களிலும் இந்த இருவரும் தங்களது ஆதிக்கத்தை தொடர்வர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே நேரம் இசாந்த் சர்மா காயம் காரணமாக நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பி இருந்தாலும், அவர் செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் அவரை வெளியில் அமர்த்திவிட்டு முகமது சிராஜ் உள்ளே எடுத்து வந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஆஷிஸ் நெக்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறிய கருத்தாவது: “இஷாந்த் சர்மா மற்றும் முகமது சிராஜ் இருவரையும் ஒப்பிட்டு பார்க்கையில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் இசாந்த் சர்மா காயம் காரணமாக வெளியில் இருந்தார். அவர் தற்போது குணமடைந்து விட்டாலும் பந்துவீச்சு துல்லியம் சற்று குறைந்து இருக்கிறது. ஆகையால் முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் இடம்பெறவேண்டும். நல்ல பர்மில் இருக்கிறார் துல்லியமாகவும் பந்து வீசி வருகிறார்.

அதேநேரம் கிட்டத்தட்ட 50 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் விளையாடி உள்ள, அனுபவம் மிக்க உமேஷ் யாதவ் உள்ளே இருக்கிறார். அவரும் வேகப்பந்து வீச்சில் அசத்துவார். இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சில் கூடுதல் வீரர்கள் இருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை முதல் போட்டியில் சிராஜ் விளையாடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.