என்னுடைய முடிவுக்கான நேரம் இது தான்; உருக்கமாக ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் !!

இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரரான உபுல் தரங்கா தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக 15 வருடத்திற்கு மேல் விளையாடிய உபுள் தரங்க 2007 மற்றும் 2011 உலக கோப்பை போட்டியின்போது இலங்கை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார், இடது கை பேட்ஸ்மேனான உபுல் தரங்கா கடந்தாண்டு மார்ச் மாதம் 2019 முதல் எந்த ஒரு போட்டியிலும் பங்கு பெறாமல் இருந்தார். அதற்குப்பின் நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பதாக தெரிவித்தார்,இவருடைய இந்த ஓய்வு ரசிகர்களிடத்தில் மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் உபுள் தரங்க 235 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 6951 ரன்கள் அடித்துள்ளார், அதில் 15 சதங்கள், 37 அரை சதங்களும் அடங்கும் இவருடைய ஆவரேஜ் 33.74. மேலும் இவர் 2011 இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 9 போட்டிகளில் பங்கேற்று 395 ரன்கள் அடித்தார் அதில் 2 சதமும் 1அரை சதமும் அடங்கும்.மேலும் இவர் 189 முறை இலங்கை அணிக்காக துவக்க வீரராக செயல்பட்டு 6000 மேற்பட்ட ரன்கள் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 36 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியிருக்கிறார் ஆனால் அதில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இவர் விளையாடவில்லை.

தனது ஓய்வு பற்றி இவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, அனைத்து நல்ல விஷயத்திற்கு ஒரு முடிவு உள்ளது, அதே போன்று எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்று கூறினார்,மேலும் இத்தனை வருட காலங்களில் நல்ல நினைவுகள் பல உள்ளன,அதற்காக எனது நண்பர்கள் இடத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடமும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும் என்னை ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் வருங்கால இலங்கை கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிரேன். நிச்சயமாக இலங்கை அணி மீண்டும் ஒரு பலமான அணியாக மாறும் என்று நம்பிக்கை வைப்பதாக கூறினார்.

Mohamed:

This website uses cookies.