எங்ககிட்ட கோஹ்லி இதைப்பற்றி அப்போவே சொல்லிட்டாரு; யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த ஜஸ்பிரித் பும்ராஹ்!

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக விராட் கோலி எங்களிடம் முன்னமே சொல்லிவிட்டார் என யாரும் அறிந்திராத உண்மையை வெளியிட்டுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

இந்திய டெஸ்ட் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, தென்ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

விராட் கோலி ராஜினாமா செய்தது குறித்து இந்திய வீரர்கள் பெரிதளவில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்தது போல இருந்தது. அவர்களது சமூக வலைதளத்தின் பதிவுகளும் அவ்வாறே வெளிப்பட்டது. ரோகித்சர்மா மட்டுமே தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ரோகித் சர்மா தனது பதிவில், “இந்த ராஜினாமா அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் இந்திய அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து சிறப்பாக வழி நடத்தியதற்கு வாழ்த்துக்கள். இனிவரும் நாட்களுக்கும் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டு இருந்தார். ஆனால் கேஎல் ராகுல், பும்ராஹ், ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற  சில வீரர்கள் எந்தவித ஆச்சரியமும் இல்லாதவாறு இருந்தனர்.

இதுகுறித்து ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், “தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு வீராட்கோலி அனைவரையும் அழைத்து நீண்ட நேரம் பேசினார். பேசி முடித்த பிறகு திடீரென இனிமேல் டெஸ்ட் கேப்டனாக இருக்க மாட்டேன். இதனை ராஜினாமா செய்கிறேன் என்று எங்களிடம் கூறினார். மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் வெற்றிகரமாக கேப்டன் பொறுப்பு வகித்து வந்த அவர் திடீரென விலகியது எல்லோருக்கும் இடியாக இருந்தது. எனினும் அவர் முடிவு செய்துவிட்டார். அவரது கேப்டன் பொறுப்பிற்கு கீழ் விளையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி.” என்றார்.

மேலும் பேசிய அவர், டெஸ்ட் கேப்டன் பொறுப்பு தனக்கு கொடுக்கப்பட்டால், என்ன செய்வீர்கள்?, என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதில் “நான் இதுவரை டெஸ்ட் கேப்டன் பொறுப்பு குறித்த எண்ணத்தில் இல்லை. எனது பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். கேப்டன் பொறுப்பு கொடுத்தால் அதைப் பற்றி நீண்ட ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்வேன். கேப்டன் பொறுப்பு அணியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் அவ்வளவு எளிதில் நாம் எடுத்துக்கொள்ள மாட்டேன்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.