தனி ஆளாக போராடிய மிரட்டல் நாயகன் மில்லர்… பந்துவீச்சில் மாஸ் காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்; 212 ரன்களில் ஆல் அவுட்டானது தென் ஆப்ரிக்கா !!

தனி ஆளாக போராடிய மிரட்டல் நாயகன் மில்லர்… பந்துவீச்சில் மாஸ் காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்; 212 ரன்களில் ஆல் அவுட்டானது தென் ஆப்ரிக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு துவக்கமே மிக மோசமாக அமைந்தது. டி காக் (3), பவுமா (0). வாண்டர் டூசன் (6), மார்கரம் (10) என தென் ஆப்ரிக்கா அணியின் முதல் நான்கு மிக முக்கிய வீரர்களும் 24 ரன்கள் எடுப்பதற்குள் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – ஹென்ரிச் கிளாசன் ஜோடி போட்டியின் தேவைக்கு ஏற்ப பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் 48 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். ஹென்ரிச் கிளாசன் விக்கெட்டை இழந்தபின் தனி ஆளாக போராடிய டேவிட் மில்லர் 105 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டேவிட் மில்லர் சதம் அடித்திருந்தாலும் கடைசி வரை களத்திற்கு நிற்க தவறி 48வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். மற்ற வீரர்களும் பெரிதாக ரன் குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததன் மூலம் 49.4 ஓவரில் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் டர்வீஸ் ஹெட் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.