இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய அணி ! தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா ! வெற்றி பெறப்போவது யார் ?

இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய அணி ! தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா ! வெற்றி பெறப்போவது யார் ?

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் கடந்த வாரம் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் கடைசி போட்டியில் இந்திய அணியும் வென்றிருந்தன. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டி20 தொடரின் முதல் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி ஞாயிற்றுகிழமை சிட்னி மைதானத்தில் துவங்கியிருக்கிறது.

இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்க டி20 தொடரில் வென்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணி கடைசி 10 டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடைந்ததில்லை.

9 போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட இருக்கிறது. இப்படி மிகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த டி20 போட்டியில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா இரண்டு போட்டியிலும் ஆட மாட்டார் என்று பேசப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் தொடர் நமக்கு வசமாகிவிடும்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை தக்கவைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் காயம் காரணமாக விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படிப் பார்த்தால் அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவருமே இருக்க மாட்டார்கள்.

இந்த போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் கூறுகின்றார். எப்போதும் போல் இந்திய நேரப்படி 1.40 மணிக்கு துவங்குகிறது. சோனி சிக்ஸ் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.